இன்று தவெகவின் 4ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

 
இன்று தவெக சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா!
 


 
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று 4வது கட்ட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. தவெக தலைவர்  விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார்.

ஜூன் 13ம் தேதி 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா... தவெக தொழிற்சங்க பிரிவு தொடக்கம்?  

2025ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடைபெற்றுள்ளது.  மே 30ம் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும்,  ஜூன்  4ம் தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், ஜூன் 13ம் தேதி  32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தவெக


இந்நிலையில் மாணவர்களுக்கு தவெக விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை தவெக தலைவர் விஜய் வழங்குகிறார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது