இன்று 4வது டி20 போட்டி... தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் இந்தியா!

 
டி20 கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா இந்தியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை, டிசம்பர் 17) உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டியைக் காணலாம்.

T20 World Cup: Super 12 – இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள்  மோதல்

கடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வெறும் 117 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்ற இந்திய அணி, அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் வென்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றத் தீவிர முனைப்புடன் உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கடந்த ஆண்டு அக்டோபருக்குப் பிறகு ஒரு அரைசதம் கூட அடிக்காத நிலையில் உள்ளார். அவர் ஃபார்முக்கு திரும்பினால், இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தென் ஆப்பிரிக்கா

மறுபுறம் தென் ஆப்பிரிக்கா அணி தனது பேட்டிங் தடுமாற்றத்தில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, தொடரைச் சமன் செய்ய அந்த அணி முழுத் தீவிரம் காட்டும்.

எனவே தொடரைக் கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சியும், அதைச் சமன் செய்ய தென் ஆப்பிரிக்கா காட்டும் எதிர்ப்பும் இந்தப் போட்டியை விறுவிறுப்பாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!