இன்று தவெக ஆண்டு விழா.. ஆதவ் அர்ஜூனா, பிரசாந்த் கிஷோர்... புது வியூகத்துடன் களமிறங்கும் தளபதி விஜய்!

 
தவெக

சீமான் கட்சியில் இருந்து கூடாரம் காலியாகிக் கொண்டே செல்கையில், விஜய் கட்சிக்கு புதுசு புதுசாக ஆட்கள் வந்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி வருபவர்கள் எல்லாம் பலம் பொருந்தியவர்களாக இருப்பதை தமிழக வாக்காளர்கள் கவனிக்க தவறவில்லை. ஆதவ் அர்ஜூனாவுக்கு குறுகிய காலத்திலேயே மக்களிடையே பிரபல்யம் உருவான நிலையில், அப்படியே விஜய் கட்சிக்கு சென்று விட்டார். இப்போது காளியம்மாளின் பெயரும் அடிபடுகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் புது வியூகத்துடன் தவெகவை வழிநடத்தி ஆலோசனைச் சொல்கிறார். 

இந்நிலையில் இன்று பிப்ரவரி 25ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா நடைபெறவுள்ள நிலையில், மாமல்லபுரம் பூஞ்சேரியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்றைய நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேற்று மாலை சென்னை வந்திறங்கினார். 

விஜய் தவெக மாநாடு

தமிழகம் முழுவதும் தவெக மாவட்டச் செயலாளர்களை இன்று மேடையிலே விஜய் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதற்கான பணிகளை கட்சியின் தலைமைக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் கூட்டணி தொடர்பாகவும் தவெக தலைவர் விஜய் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது.தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நாளை நடைபெறுகிறது.

தவெக

இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கட்சி நிா்வாகிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கான பாதைகள், வாகனக்கள் நிறுத்துமிடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், விஜய் வந்து செல்வதற்கான பாதை, சுமாா் 2000 பேருக்கு சைவ, அசைவ உணவு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web