இன்று சாம்பியன்ஸ் கோப்பை பைனல்... எகிறும் எதிர்பார்ப்பு... இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற உள்ள நிலையில் நியூசிலாந்து அணியால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இன்றைய இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் ரவி சாஸ்திரி “ இந்திய அணியை ஒரு அணியால் வீழ்த்த முடியும் எனில் அது நியூசிலாந்து அணியால் மட்டுமே முடியும். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கவனமாக விளையாட வேண்டும்.
இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது ஆல்ரவுண்டருக்கு கிடைக்கும் எனக் கூறுவேன். இந்திய அணியிலிருந்து அக்ஷர் படேல் அல்லது ரவீந்திர ஜடேஜாவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நியூசிலாந்து அணியில் கிளன் பிலிப்ஸுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கிளன் பிலிப்ஸ் அருமையாக ஃபீல்டிங் செய்கிறார். அவர் 40 அல்லது 50 ரன்கள் மற்றும் ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தவும் வாய்ப்பிருக்கிறது.
விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற வீரர்கள் இருக்கும் ஃபார்மில் அவர்களை நீங்கள் 10 ரன்களுக்கும் மேல் எடுக்கவிட்டால், அது எதிரணிக்கு ஆபத்தாக அமையலாம். நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுடன் ரச்சின் ரவீந்திராவும் இருக்கிறார். அவர் மிகவும் திறமை வாய்ந்த இளம் வீரர். கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திராவை நீண்ட நேரம் களத்தில் நிலைக்கவிட்டால், அவர்கள் எதிரணிக்கு ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள் எனக் கூறியுள்ளார். இதுவரை 4 ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 3 முறை இந்திய அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!