இன்று இந்த ராசிக்காரர்களுக்கு யோகம்... வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க!

 
இவங்களுக்கு நிச்சயம் வீடு, மனை  யோகம் உண்டு!!

இன்றைய சிறப்புகள் (டிசம்பர் 2, 2025 - செவ்வாய்க்கிழமை):

திதி: துவாதசி (பகல் 12:29 வரை), பின் திரயோதசி (பிரதோஷம்)

நட்சத்திரம்: அசுவினி (மாலை 6:23 வரை), பின் பரணி

நல்ல நேரம்: காலை 7:45 – 8:45 மணி / மாலை 4:45 – 5:45 மணி

ராகு காலம்: மதியம் 3:00 – 4:30 மணி

எமகண்டம்: காலை 9:00 – 10:30 மணி

சூலம்: வடக்கு (பரிகாரம்: பால்)

மேஷம்

நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடும். பழுதான வீடு அல்லது வாகனத்தை மாற்றுவது குறித்துச் சிந்திப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்

நேர்கொண்ட பார்வையுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலங்கள் அல்லது உயர் அதிகாரிகள் தக்க சமயத்தில் உதவ வாய்ப்புள்ளது. வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். பேசும்போது யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

மிதுனம்

நீண்ட நாள் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடன்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்..வியாபாரத்தில் வீண் அலைச்சல் குறையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

ஜோதிடம் ராசி ராசிபலன்கள் நேரம் யோகம் அதிர்ஷ்டம்

கடகம்

நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகள் உங்கள் குடும்பச் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கவும்.

சிம்மம்

புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைந்து, உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது.

கன்னி 

இன்று சந்திராஷ்டமம். வீண் அலைச்சல் மற்றும் டென்ஷன் சற்று அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாகக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நிதானத்துடன் வசூலிக்கப் பாருங்கள். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.

துலாம்

நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். வியாபாரத்திற்காகப் புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். வராமல் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்

சாதுர்யமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். உற்சாகமும், தோற்றப் பொலிவும் அதிகரிக்கும். பிள்ளைகள் நம்பிக்கையான வார்த்தைகள் சொல்வார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறைந்து, சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பண வரவு உண்டு.

தனுசு

சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும், உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடுபிடிக்கும்; வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வசூலாகும். பொருட்கள் சேரும்.

ராசி யோகம் அதிர்ஷ்டம்

மகரம்

குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும். வங்கிக் கடன் உதவிகள் தாமதமின்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

கும்பம்

வாழ்க்கையின் நடைமுறை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். நண்பர்களின் உதவியால் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் லாபம் தரும். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும்.

மீனம்

வீண் அலைச்சல், டென்ஷன் சற்று அதிகரிக்கும். மூத்தோரின் பேச்சைக் கேட்டு முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சகோதர உறவுகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தடைகள், இடையூறுகள் இருந்தாலும் தைரியமாகச் சமாளிப்பீர்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!