இன்று தேய்பிறை சஷ்டி... தவிர்க்க வேண்டிய 5 முக்கியச் செயல்கள்!

 
முருகர் சஷ்டி முருகன் விளக்கு

இன்று ஜனவரி 9ம் தேதி மார்கழி மாத தேய்பிறை சஷ்டி. வெள்ளிக்கிழமையுடன் இணைந்து வரும் இந்தத் தேய்பிறை சஷ்டி, வழிபாட்டிற்கு எவ்வளவு உகந்ததோ, அதே அளவு சில செயல்களைத் தவிர்ப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மிக ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் தேய்பிறை சஷ்டி அன்று நாம் செய்யக்கூடாத தவறுகள் எவை என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அசைவம் தவிர்த்தல்:

சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்தது என்பதால், இன்று வீட்டில் அசைவம் சமைப்பதையோ அல்லது வெளியில் சென்று அசைவம் உண்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். அசைவ உணவு உட்கொள்வது விரதத்தின் பலனைக் குறைப்பதோடு, மன அமைதியையும் பாதிக்கும்.

தங்கம்

கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்:

தேய்பிறை சஷ்டி என்பது கஷ்டங்கள் குறைய வேண்டிய நாள். இந்நாளில் யாரிடமிருந்தும் பணம், நகை அல்லது பொருட்களைக் கடனாக வாங்கக்கூடாது. இன்று வாங்கும் கடன், ஒருபோதும் தீராத சுமையாக மாறிவிடும் அல்லது அந்தப் பணத்தால் நமக்கு நற்பலன் கிடைக்காது என ஆன்மீகம் கூறுகிறது.

தங்கத்தை அடமானம் வைக்க வேண்டாம்:

தங்கம் என்பது குரு மற்றும் மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை மற்றும் சஷ்டி இணைந்து வருவதால், இன்று அடமானம் வைக்கப்படும் நகையைத் திருப்புவதில் பெரும் தடைகள் உண்டாகும். தங்கம் வீட்டை விட்டு வெளியேறுவது சுபிட்சத்தைக் குறைக்கும்.

இலவசமாக எதையும் பெறாதீர்கள்:

இந்நாளில் மற்றவர்களிடமிருந்து எதையும் இலவசமாகப் பெற வேண்டாம். ஒரு பொருளைப் பெற வேண்டிய சூழல் இருந்தால், அதற்குரிய சிறு தொகையையாவது கொடுத்து விட்டுப் பெறுவது நல்லது. இலவசமாகப் பெறுவது மற்றவர்களின் எதிர்மறை ஆற்றலையும் நமக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வாய்ப்புள்ளது.

தானம்

கோபம் மற்றும் வாக்குவாதம்:

தேய்பிறை சஷ்டி மனதைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று யாரிடமும் கோபமாகப் பேசுவதோ, சண்டையிடுவதோ கூடாது. குறிப்பாகப் பெரியவர்கள் மற்றும் குருமார்களை நிந்திக்கக்கூடாது. இது முருகனின் அருளைத் தடுக்கும்.

இன்று வெள்ளிக்கிழமை. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் வீட்டைத் துடைப்பது அல்லது ஒட்டடை அடிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்வார்கள். இன்று சஷ்டியும் சேர்ந்து வருவதால், வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொண்டு விளக்கேற்றி வழிபடுவது மட்டுமே சிறந்தது. இன்று பால், தயிர் போன்ற மங்கலப் பொருட்களை மற்றவர்களுக்குத் தானமாகக் கொடுக்கலாம், ஆனால் கடனாகக் கொடுக்கக் கூடாது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!