இன்று அமாவாசையில் நுழையும் சனி... 30 வருஷங்களுக்குப் பின் கொட்டப் போகுது பணமழை... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

 
சனி பகவான்

இன்று மார்ச் 29ம் தேதி அமாவாசையில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு செல்கின்றார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்யும் சனி பகவான், மீன ராசியில் வரும் 2027ம் ஆண்டு வரை பயணம் செய்வார்.

இன்றைய தினம் சனி பகவான் இடமாறும் நாளில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இன்று சனி பெயர்ச்சி மட்டுமல்லாமல் சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை என அனைத்து சிறப்பு நிகழ்வுகளும் ஒரே நாளில் நிகழ உள்ளன.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணமும் இன்று தான் நிகழ உள்ளது. சுமார் 30 வருடங்களுக்குப் பின் சனி அமாவாசை திருநாளில் சனி பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகங்களை கொடுக்கப் போகின்றது. 

சனி பகவான்

கடகம்

கடக ராசியில் 7 மற்றும் 8வது வீட்டின் அதிபதியாக விளங்கக்கூடிய சனி பகவான், 9வது வீட்டிற்கு செல்ல உள்ளார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வாழ்வில் புதிய நல்ல மாற்றம் ஏற்படும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். நீண்ட கால ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்

கன்னி 

கன்னி ராசியில் சனிபகவான் 7வது வீட்டிற்கு செல்கிறார். இதனால் காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

துலாம்

சனி அமாவாசை சனி பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். ராசியில் 6வது வீட்டிற்கு சனி பகவான் செல்கின்றார். இதனால் எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கும், நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ராசிபலன் சனி

மகரம்

மகர ராசியில் 2வது வீட்டின் அதிபதியாக விளங்கக்கூடிய சனிபகவான் 3வது வீட்டிற்கு செல்கிறார். இதனால் வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்றம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

நல்ல நிதி ஆதாரங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web