இன்று முதலாவது டி20 போட்டி... இந்தியா - நியூசிலாந்து பலப்பரீட்சை!
ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரில் பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகிவிட்டது.
இன்று இரவு 7 மணிக்கு நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் முதலாவது டி20 ஆட்டம் தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் நேரலையாகப் பார்க்கலாம்.
இந்தியா: கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியின் முதுகெலும்பாக உள்ளனர். குறிப்பாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடித் தொடக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் எதிரணிக்குச் சவாலாக இருப்பார்கள்.
நியூசிலாந்து: மிட்செல் சான்ட்னெர் தலைமையில் களமிறங்கும் கிவிஸ் அணி, ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்தில் உள்ளது. ரச்சின் ரவீந்திரா மற்றும் டிவான் கான்வே ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்குப் சவாலாக அமையலாம்.
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரிங்கு சிங், ஷிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.
நியூசிலாந்து: டிம் ராபின்சன், டிவான் கான்வே (WK), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, இஷ் சோதி, ஜேக்கப் டப்பி.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
