இன்று குரூப்-1, 1ஏ முதன்மைத் தேர்வு... இதையெல்லாம் மறக்காதீங்க!
இன்று காலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் தொடங்குகிறது. தேர்வர்கள் இந்த விஷயங்களை மறக்காமல், கவனமாக தேர்வை எதிர்கொள்ளுங்க.
சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் 70 காலிப் பணியிடங்களும், உதவி வனப் பாதுகாவலர் (குரூப்-1ஏ) பதவியில் 2 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 72 இடங்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 1 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அதில் வெற்றி பெற்ற 1,865 பேர் தற்போது முதன்மைத் தேர்வை எழுதத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று டிசம்பர் 1ம் தேதி தொடங்குகிறது. இன்று தமிழ் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
குரூப்-1 பதவிகள்: தாள்-2, தாள்-3, தாள்-4 தேர்வுகள் முறையே டிசம்பர் 2, 3, 4ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

குரூப்-1ஏ பதவிகள்:
அதற்கான முக்கியத் தேர்வுகள் முறையே டிசம்பர் 8, 9, 10ம் தேதிகளில் நடக்க இருக்கின்றன. இந்த முதன்மைத் தேர்வுக்காகச் சென்னையில் மட்டும் மொத்தம் 19 மையங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்வர்கள் உரிய நேரத்தில் மையங்களுக்குச் சென்று தேர்வை எழுத அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
