இன்றே கடைசி... அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு உடனே விண்ணப்பியுங்க... !
தமிழகம் முழுவதும் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு மே 7ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதுவரையில் இளங்கலை பட்டப்படிப்புக்கு 2,15,809 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே இன்றுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்றுடன் கால அவகாசம் திட்டமிட்டபடி நிறைவு பெறுகிறது.
அதே நேரத்தில் விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
