இன்று கடைசி தேதி... அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
ஐடிஐ
பத்தாவது, பன்னிரெண்டாவது தேர்ச்சியடைந்தவர்கள் இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க. எல்லோரும் கல்லூரிகளில் அட்மிஷனுக்காக காத்திருக்கையில், தொழிற்பயிற்சியிலும் நல்ல எதிர்காலம் உண்டு என்பதைத் தெரிஞ்சுக்கோங்க. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு இன்று ஜூன் 13ம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு 19.05.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 13.06.2025 ஆகும். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

ஐ.டி.ஐ-யில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் தொழில் 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்ப புதிய தொழிற்பிரிவுகள் 1. Advanced CNC Machining Technician 2. Industrial Robotics & Digital Manufacturing மற்றும் 3. Mechanic Electronic Vehicle ஆகிய மூன்று தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/-, பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள், 2 செட் சீருடைகள் மற்றும் 1 செட் காலணிகள் போன்ற சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

மேலும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 அல்லது 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சேர்க்கை தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் முதல்வரை நேரில் அணுகவும். 04652- 261463, 9499055806. அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அரசு ITI-ல் சேர்ந்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக் கொள்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது