இன்று கடைசி தேதி... சபரிமலை மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு!

 
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளில் கலந்துக் கொள்ள தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். கடந்த நவம்பர் 16ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு மூலம் அனுமதிக்கப்பட்டனர். சீசனின் தொடக்கத்தில் தினமும் 70 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாகவும், 20 ஆயிரம் பேர் உடனடி முன்பதிவு மூலமும் சென்றனர்.

சபரிமலை ஐயப்ப  பக்தர்கள் விமான நிலையம் இருமுடி

சபரிமலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பக்தர் பலியானார். இதனால் கோர்ட்டு தலையிட்டது. உடனடி தரிசன முன்பதிவின் எண்ணிக்கையைக் குறைக்க அது அறிவுறுத்தியது. அதன்படி, 20 ஆயிரமாக இருந்த உடனடி தரிசன எண்ணிக்கை 5 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது.

சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை

தற்போது, முன்பதிவு செய்தும் பக்தர்கள் வராததால், உடனடி தரிசனத்தில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளுக்கான முன்பதிவை நிறுத்தி வைத்திருந்தனர்.

தற்போது அதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மகர ஜோதி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் ஜனவரி 10ம் தேதி நிறைவடைகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!