இன்று கடைசி தேதி... எஸ்பிஐ வங்கியில் 1,146 காலி பணியிடங்கள்.. முழு விபரம்!
எஸ்பிஐ (SBI) ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (SCO) பணிக்கான விண்ணப்ப அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து செயல்பட வேண்டிய தருணம் இது.
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தனது ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்களின் எண்ணிக்கையை 996-லிருந்து 1,146 ஆக உயர்த்தியுள்ளது. இதற்கான விண்ணப்பத் தேதியும் இன்று ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்கள்: VP Wealth (SRM), AVP Wealth (RM), மற்றும் Customer Relationship Executive.

கடைசி தேதி: ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்வுக் கட்டணம் செலுத்தவும் இன்று (ஜனவரி 10, 2026) இறுதி நாளாகும்.
வயது வரம்பு: பணியிடத்தைப் பொறுத்து 20 முதல் 42 வயது வரை (01 மே 2025 தேதியின்படி). அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduate) முடித்திருக்க வேண்டும். நிதி சார்ந்த ஆவணங்கள் கையாளுதல் மற்றும் தகவல் தொடர்புத் திறன் கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
பொது/OBC/EWS பிரிவினர்: ₹750
SC/ST/PwBD பிரிவினர்: கட்டணம் ஏதுமில்லை (Exempted).

விண்ணப்பிக்கும் முறை:
எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in/careers அல்லது sbi.bank.in செல்லவும்.
'Current Openings' பகுதியில் 'RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICER' (Advt. No: CRPD/SCO/2025-26/17) என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவும்.
'Apply Online' கொடுத்து உங்கள் விவரங்களைப் பதிவு செய்யவும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
