இன்று கடைசி தேதி... நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவு!

 
நீட் தேர்வு
இன்று மாா்ச் 7ம் தேதியுடன் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கான விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு பெறுவதால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இன்று மறக்காமல் முன்கூட்டியே நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தியுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

நீட் தேர்வு

நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும். அந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 7ம் தேதி தொடங்கியது. இந்த நுழைவு தேர்வில் கலந்துக் கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாா்ச் 7ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் https://neet.nta.nic.in/neetug-2025-registration-and-online-application/ வலைதளம் வழியாக விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதுகலை நீட் தேர்வு

தோ்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை என்டிஏ இணையதளத்திலோ, 011 40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web