இன்று கடைசி தேதி... 10வது முடித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்கள்.. முழு விபரம்!
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று நவம்பர் 7ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிஞ்சிருந்தா போதும். இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க. 10வது மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சிப் பெற்றவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று எந்த வேலை இருந்தாலும் மறக்காமல் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து விடுங்க. நீங்கள் அதிகமாக படித்திருக்கலாம்... அதிக திறமையுள்ளவராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு தெரிந்த, நண்பர்கள், உறவினர் வீடுகளில் 10வது முடித்த, இந்த பணியிடங்களுக்கு தகுந்த நபர் யாரேனும் இருக்கலாம். அவர்களிடமும் இந்த தகவலை சொல்லுங்க. இது யாரோ ஒருவருடைய வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அமையும்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 2,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிப் பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2000
பணி: விற்பனையாளர்
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக நியமன நாளில் இருந்து ஓராண்டுக்கு மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு மாதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வழங்கப்படும்.
பணி: கட்டுநர்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக நியமன நாளில் இருந்து ஓராண்டுக்கு மாதம் ரூ.5,500 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு மாதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு:
எஸ்சி, எஸ்டி,எம்பிசி, பிசி, சீர்மரபினர் மற்றும் இந்த வகுப்புகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பில்லை. ஓசி பிரிவினர் 32-க்குள்ளும், இதே பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ள்ளும், மாற்றுத் திறனாளிகள் 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரரின் வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்பயிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப் பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
விற்பனையாளர் பணிக்கு ரூ.150 மற்றும் கட்டுநர் பணிக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.drbcgl.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்ப்பிப்பதற்காக கடைசி நாள்: இன்று 7.11.2024
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!