இன்று வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்... பவார் குடும்பம் ஒன்றிணைந்தது - மாநகராட்சி தேர்தலில் மெகா கூட்டணி!

 
சரத் பவார் குடும்பம்

மும்பையில் பிம்ப்ரி–சிஞ்ச்வட் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் மீண்டும் ஒன்றினைவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

"பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் போது, தேசியவாத காங்கிரஸ் (NCP) மற்றும் தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்திர பவார் ஆகிய இரு அணிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் பவார் குடும்பம் மீண்டும் ஒன்றாக இணைகிறது" என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

சரத்பவார்

கடந்த 2023-ல் கட்சி உடைந்த பிறகு இரு அணிகளும் மோதிக் கொண்டதில் வாக்குகள் பிரிந்தன. குறிப்பாக பவார் குடும்பத்தின் கோட்டையான புனே மற்றும் பிம்ப்ரி–சிஞ்ச்வட் பகுதிகளில் பாஜக-வின் ஆதிக்கத்தைத் தடுக்க இந்தத் 'தந்திரோபாயக் கூட்டணி' (Tactical Alliance) அவசியமாகக் கருதப்படுகிறது.

"பரிவார் (குடும்பம்) ஒன்றாக வருகிறது" என அஜித் பவார் குறிப்பிட்டது, தொண்டர்களிடையே நிலவிய குழப்பத்தை நீக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் அஜித் பவார் அணி 'கடிகாரம்' சின்னத்திலும், சரத் பவார் அணி 'தூதாரி' சின்னத்திலும் தங்களது பலத்தைப் பொறுத்துப் போட்டியிட உள்ளன.

தேர்தல் வேட்புமனு தாக்கல்

மகாராஷ்டிராவில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கான (மும்பை, புனே உட்பட) தேர்தல் ஜனவரி 15, 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (டிசம்பர் 30) கடைசி நாளாகும். பிம்ப்ரி–சிஞ்ச்வட் போலவே புனே மாநகராட்சி தேர்தலிலும் இந்த இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில அளவில் அஜித் பவார் பாஜக-வுடனும், சரத் பவார் காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே கூட்டணியுடனும் (MVA) இருந்தாலும், உள்ளூர் மாநகராட்சி தேர்தலில் இணையும் இந்த முடிவு மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இது பவார் குடும்பத்தின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!