இன்றே கடைசி நாள்... உடனே முந்துங்க... செய்கூலி, சேதராம் இல்லாம தங்கம் வாங்கலாம்!

 
இ கோல்டு தங்கம் தங்கபத்திரம்

உடனே முந்துங்க.. .நகைக் கடைகளில் அலைமோதிக் கொண்டு செய்கூலி, சேதாரம் என்று பாடுபட்டு சேர்த்த பணத்தை வீணாக்காமல், தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யுங்க. இன்றோடு இந்த மாதத்துக்கான தங்க பத்திரத்தின் விற்பனை முடிவடைகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இல்லத்தரசிகள் பாதுகாப்பான சேமிப்புக்காக தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், பெரும்பாலானவர்கள் இ-கோல்டு வாங்குவது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் தங்க நகைகளாக வாங்குவதற்கு முற்பட்டு நகைக்கடைகளில் செய்கூலி, சேதாரம் என்று பெரும்பகுதியை வீணடிக்கிறார்கள். இ-கோல்ட் வாங்குவது பாதுகாப்பானது. நீங்கள் ஒரு கிராம் கூட வாங்கலாம். சிறுக சிறுக சேமிக்கலாம். உங்கள் தங்க பத்திரத்துக்கு வட்டியும் உண்டு. இந்தியாவை பொறுத்தவரை தங்கம் மிகப்பெரிய சேமிப்பு பெட்டகமாக இருந்து வருகிறது. அதிலும் கொரொனா கால கட்டத்திற்கு பிறகு சேமிப்பின் அவசியத்தையும் அதில் முதன்மையான முதலீட்டை தங்கத்திற்கும் நடுத்தர மக்கள் கொடுத்து வருகின்றனர். அதுவும்  ஆபரணத் தங்கமாக இல்லாமல் டிஜிட்டல் தங்கமாக அதாவது பேப்பர் கோல்டாக இருப்பது மிகவும் நல்லது என எண்ணப்படுகிறது. இதற்காக ரிசர்வ் வங்கி  தங்கப்பத்திரங்களை அவ்வப்போது விற்பனை செய்து வருகிறது.  முதலீட்டாளர்களுக்கு தங்க பத்திர விற்பனை என்பது நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த விற்பனை இன்றுடன் முடிவடைகிறது. 

திருச்சியில் தொடரும் கடத்தல்! ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்!

இந்த விலை ஆபரணத் தங்கத்தின் விலையை காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கும்.  இந்த வெளியீட்டில் ஒரு கிராமுக்கு விலை 5611 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் மூலமாக வாங்கும்போது 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். ஆக ஆன்லைன் மூலமாக முதலீடு செய்யும்போது கிராமுக்கு 5561 ரூபாய் கொடுத்தால் போதுமானது.  தங்க பத்திரங்கள் இந்தியர்கள், ஹெச் யு எஃப் , அறக்கட்டளைகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பலவும் இவற்றை வாங்கி சேமித்து வருகின்றன. இந்த தங்க பத்திரங்கள், அரசுப் பத்திரச் சட்டம் 2006ன் கீழ் இந்திய அரசின் மூலம் ரிசர்வ் வங்கியால் அரசின் பத்திரங்கள் வடிவிலேயே வழங்கப்படுகின்றன.இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனிலும் எளிதாக வாங்கிக் கொள்ள  முடியும். 

ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள்  அதாவது 4 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம். அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம். ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. பிசிகல் தங்கத்தினை போன்றே இந்த தங்க பத்திரங்களையும் பிணையமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்கப் பத்திரங்களுக்கான தொகையை ஒருவர் பணமாக செலுத்தினால் 20,000 ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் செலுத்த வேண்டும் எனில் டிடி ஆகவோ அல்லது இணைய வங்கி மூலமாகவோ செலுத்திக் கொள்ளலாம்.தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருக்கலாம்.

ரிசர்வ்

அல்லது 5 வருடங்கள் கழித்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். தங்க பத்திரங்கம் முதிர்வுக்கு பிறகு தங்கமாக வாங்கிக் கொள்ள முடியுமா என்றால், நிச்சயம் முடியாது. இந்த தங்க பத்திர திட்டம் என்பது, பிசிகல் தங்கத்தின் தேவையை குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். மேலும் முதலீட்டு நோக்கில் உருவாக்க பட்ட ஒரு திட்டம். ஆக இந்த திட்டத்தில் பிசிகல் கோல்டாக பெற முடியாது. பணமாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.வட்டி விகிதம், வரி சலுகை, பாதுகாப்பு, டிஜிட்டல் வடிவம், தங்கத்தினை போல பிணையமாக வைத்துக் கடன் வாங்கிக் கொள்ளலாம் என பல சலுகைகள் உள்ளன.  இப்பத்திரங்களை வெளியிடுவதால் பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறி வரும் நிலையில் சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் பேப்பர் கோல்ட் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web