இன்றே கடைசி... மாதம் ரூ1,00,000/- சம்பளத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ஆயில் நிறுவனம். இந்நிறுவனத்தில் 246 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 246 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடைலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : இந்தியன் ஆயில் நிறுவனம்
பணியிடங்கள் : 246
பதவி :ஜூனியர் ஆபரேட்டர்
கல்வித்தகுதி :12ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள்
கல்வித் தகுதி:
ஜூனியர் ஆபரேட்டர் கிரேடு 1 : ஐடிஐ, 12 ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் .ஒரு ஆண்டு பணி அனுபவம்
ஜூனியர் அட்டண்டண்ட் கிரேடு 1 : 12 ம் வகுப்பு தேர்ச்சி குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

ஜூனியர் பிசினஸ் அசிஸ்டண்ட் கிரேடு III- : டிகிரி குறைந்தது 45 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி . எம்எஸ் வேர்டு, எக்செல் & பவர் பாயிண்ட் போன்ற கணினியின் அடிப்படை அறிவு அவசியம் ஆகும். நிமிடத்திற்கு 20 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.02.2025 இன்று இரவு 11.55க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 26 வயது நிரம்பியவர்கள் . எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
சம்பளம் விவரம்:
* ஜூனியர் ஆபரேட்டர் Grade I: ரூ. 23,000 - 78,000/-
* ஜூனியர் அட்டண்டண்ட் Grade I: ரூ. 23,000 - 78,000/-
* ஜூனியர் பிசினஸ் அசிஸ்டண்ட் Grade III: ரூ. 25,000 - 1,05,000/-
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை, கணிணி வழி தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழகத்தில் தேர்வு மையமானது சென்னையில் அமைக்கப்படும்.
விண்ணப்பக்க கட்டணம் : ரூ.300 எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு எந்த தேர்வுக் கட்டணமும் கிடையாது.

கூடுதல் தகவல்களுக்கு
https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/613feac7e44444bb91a7d6b610014b16.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்க் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
