இன்றே கடைசி!! பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மறந்திடாதீங்க!!

 
கலந்தாய்வு

தமிழகத்தில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது.  பொறியியல் படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்க உள்ள நிலையில்  அதற்கு  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில், மாணவர்கள் http://tneaonline.org , http://tndte.gov.in போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம்  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் பொது பிரிவினருக்கான  கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்க உள்ளது.  ஆகஸ்ட் 2ம் தேதி பொறியியல் கலந்தாய்வு என அறிவித்திருந்த நிலையில், ஒரு மாதம் முன்கூட்டியே இந்த கலந்தாய்வு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3ம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க உள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான  விண்ணப்ப பதிவு மே 5ம் தேதி தொடங்கப்பட்டது.  

பொறியியல் கல்லூரி

கடந்த 8 நாட்களில் மட்டும் பொறியியல் படிப்புகளில் சேர 91038 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இன்றைய காலை நிலவரப்படி 1 லட்சத்தை தாண்டியுள்ளது.  மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர  விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், மாணவர்களின் வசதிக்காக மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  1 லட்சம் விண்ணப்பங்களை தாண்டிய நிலையில்,  அவர்களில் 46010 பேர் கட்டணம் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.  

மாணவிகள்

அதிலும், 17618 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.  பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 4ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருப்பதாக பொறியியல் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web