இன்று குடியரசு தினவிழா கொண்டாட்டம்... அசைவ உணவுகள் விற்கத் தடை!
இன்று நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேசிய விழாவின் புனிதத்தையும், கண்ணியத்தையும் காக்கும் பொருட்டு, இன்று குடியரசு தினத்தில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்ட நிர்வாகம், இறைச்சி விற்பனைக்கு முழுவதுமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டத்தில், இன்று ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகள், மீன் மற்றும் முட்டை ஆகியவற்றை விற்பனை செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மனோஜ் சத்யவான் மஹஜன், இந்த உத்தரவை மாவட்டத்திலுள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று, பொது இடங்களில் இறைச்சி வெட்டுவதைத் தவிர்க்கவும், விழாக்காலங்களில் அமைதியையும், தூய்மையையும் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
