இன்று திருக்கல்யாணம்... பழனி தைப்பூசத்திற்கு குவியும் பக்தர்கள்... நாளை தேரோட்டம்!

 
தைப்பூசம்

நாளை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் "அரோகரா" முழக்கம் விண்ணதிர துவங்கி இருக்கிறது. அறுபடை வீடுகளில் முக்கியத் தலமான பழனியில் தைப்பூசத் திருவிழா தொடங்கிய நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகத் திரண்டு வந்துக் கொண்டிருக்கின்றனர்.

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். வேல், மயில் மற்றும் சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிறக் கொடிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் தேவாரம் பாட, கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

பழனி

அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா..." எனப் பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர்.இன்று ஜனவரி 31 வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இன்று மாலை வெள்ளித் தேரோட்டம் ரத வீதிகளில் உலா வரும்.

நாளை பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 4ம் தேதி இரவு தெப்பத்தேர் திருவிழாவுடன், கொடி இறக்கப்பட்டுத் திருவிழா நிறைவுபெறும்.

பழனி பங்குனி

தைப்பூசத்திற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால், பாதுகாப்பு மற்றும் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் பிப்ரவரி 3 வரை மலைக்கோவிலில் நடைபெறும் 'தங்க ரதப் புறப்பாடு' நிறுத்தி வைக்கப்படுவதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மீண்டும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் தங்க ரத உலா வழக்கம் போல் நடைபெறும்.குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காகக் கூடுதல் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் பழனி நகர் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!