இன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு!

 
திருவாரூர்

இன்று உலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டம்  தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்கு ஆழித்தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான  ஆழித்தேரோட்டம் இன்று ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ளது. 

உள்ளூர் விடுமுறை

திருவாரூரில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 15 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் நாள்தோறும் பங்குனி உத்திர திருவிழா  உற்சவம், சாமி வீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது. 

திருவாரூர்
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7ம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கோடை வெயில் தாக்கத்தால் 1 - 5 வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை மாற்றப்பட்ட நிலையில், இன்று ஏப்ரல் 7ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுகள் மட்டும் அம்மாவட்டத்தில் 8ம் தேதி நடக்கும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web