இன்றே கடைசி!! மாணவர்களே உடனே விண்ணப்பியுங்க!!

 
தேர்வு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகின.இந்த பொதுத் தேர்வில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை.  இவர்களுக்காக துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு, விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாளாகும்.  இன்று மாலை 5 மணி வரையுடன் காலக்கெடு முடிவடைகிறது. தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் சனிக்கிழமை வரை விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முடிவுகள்

 ஜூன் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி 19, 20, 21, 22, 23 ,24, 25, 26  நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல்  1.15 மணி வரை 12ம் வகுப்பு துணை தேர்வு நடைபெற உள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 8.65லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 48000க்கும் மேற்பட்டோர் பல்வேறு  காரணங்களால் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 10- முதல் 29ம் தேதி வரை 79 மையங்களில் நடைபெற்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web