இன்று 40 நாட்கள் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்... தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்!

 
சாம்பல் புதன்


 கிறிஸ்தவ சகோதரர்கள் தங்களது தவக்காலத்தை தொடங்கியுள்ளனர்.  அவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகயும், உயிர்தெழுந்த 3 வது நாளை  ஈஸ்டா் பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர்.  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள்  தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர்.  அதன்படி நிகழாண்டுக்கான தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இருந்து புனிதவெள்ளி வரை 40 நாள்கள் கிறிஸ்தவா்கள் அசைவ உணவைத் தவிா்ப்பதுடன், விரதம் உட்பட  பல்வேறு நோ்த்திக் கடன்களில் ஈடுபடுவா்.

சாம்பல் புதன்


இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.  கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது.இதேபோன்று தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம், யூதா ததேயூ ஆலயம், மிக்கேல் அதிதூதர் ஆலயம் உட்பட  தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட சபைகளிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

சாம்பல் புதன்

இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர்.அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் திருச்சிலுவை வழிபாடு நடைபெறும்.  ஏப்ரல் 13 ம் தேதி குருதோலை ஞாயிறு, தொடர்ந்து 17 ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்வு நடைபெறும்.பின்னர், அடுத்த நாள் புனித வெள்ளி நாளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெற உள்ளன.  இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை  ஏப்ரல் 20 ம் தேதி கொண்டாடப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web