இன்று தவெக செயல் வீரர்கள் கூட்டம்... தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனை!

 
தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு,  சந்திரா கன்வென்ஷன் சென்டர், ஒய்.எம்.சி.ஏ , ராயப்பேட்டையில் நடைபெறுகிறது. த.வெ.க-வின் தேர்தல் பிரச்சாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முதற்கட்டப் பணிகள் மற்றும் தொகுதி வாரியான பொறுப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 'விசில்' சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான புதிய பிரச்சார யுக்திகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

ஆதவ் அர்ஜுனா

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பூத் கமிட்டிகளை அமைப்பது மற்றும் அவற்றைச் சீரமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். ஏற்கனவே கட்சி மேற்கொண்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் அடுத்தகட்ட இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

கடந்த ஜனவரி 25-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசிய "தனியாக நின்றாலும் கெத்தாக ஜெயிப்போம்" என்ற முழக்கத்தைத் தொடர்ந்து, அதனை மாவட்ட வாரியாகச் செயல்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

 தவெக என்றாலே இப்ப எல்லோருக்கும் பயம் தான்... புஸ்ஸி ஆனந்த் அட்ராசிட்டி !  

த.வெ.க-வின் கூட்டங்களில் 'QR Code' அடிப்படையிலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, முறையான அனுமதி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய சென்னை கூட்டத்திலும் இதேபோன்ற பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் த.வெ.க-வின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், சென்னை மாவட்டச் செயலாளர்களுக்கு இந்தத் தேர்தலில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!