இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம்...? தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் விளக்கம்!

இந்தியா முழுவதும் ஜூலை 15ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் பரவின. இதனை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி உண்மையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என திட்டவட்டமாக தெளிவாக அறிவித்துள்ளது. மேலும் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து, NHAI தனது அதிகாரப்பூர்வ X பதிவில், “இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. இது தவறான செய்தி,” எனக் கூறியுள்ளது.
📢 महत्वपूर्ण
— Nitin Gadkari (@nitin_gadkari) June 26, 2025
कुछ मीडिया हाऊसेस द्वारा दो-पहिया (Two wheeler) वाहनों पर टोल टैक्स लगाए जाने की भ्रामक खबरें फैलाई जा रही है। ऐसा कोई निर्णय प्रस्तावित नहीं हैं। दो-पहिया वाहन के टोल पर पूरी तरह से छूट जारी रहेगी। बिना सच्चाई जाने भ्रामक खबरें फैलाकर सनसनी निर्माण करना स्वस्थ…
இந்த விவகாரத்தில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தலையிட்டு, இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “சில சமூக வலைதளங்கள் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படும் என தவறாக செய்தி வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படாது” எனவும் திட்டவட்டமாக அவரும் விளக்கம் அளித்தார்.
இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை என்றாலும் கூட NHAI பிற வாகனங்களுக்கான சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி ஆகஸ்ட் 15, 2025 முதல், தனியார் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு ரூ 3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான ஆண்டு சுங்கப் பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், ஒரு வருடத்திற்கு 200 பயணங்களுக்கு அனுமதி அளிக்கிறது ஆனால் இது இருசக்கர வாகனங்களுக்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!