தக்காளி அதிரடி விலை குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தக்காளி

தமிழகத்தில் கடந்த வாரத்தில் கிலோ ரூ40க்கு விற்கப்பட்ட தக்காளி திடீரென விலை உயர்ந்து இந்த வாரத் தொடக்கத்தில் கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது.  இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில்  தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் நேற்று முதல் தக்காளியை கொள்முதல் விலைக்கே அதாவது கிலோ ரூ60க்கே  விற்பனை செய்து வருகிறது.  

தக்காளி விலை உயர்வு

பொதுமக்கள் இதனை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இந்நிலையில் இன்று சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்றே  குறைந்து கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.   தக்காளி திடீர் விலை உயர்வை அடுத்து உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை  குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தக்காளி

சில்லறை விற்பனைக்கடைகளை பொறுத்தவரை   தக்காளி கிலோவுக்கு ரூ.60ல் இருந்து ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது.   வழக்கமாக 600 டன் வரை தக்காளி தேவை இருக்கும் நிலையில் இனிவரும் நாட்களில் 1200 டன் வரை தக்காளி வரவு அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  அப்படி வந்தால் இன்னும் விலை குறைவு ஏற்படலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web