தக்காளி கிடுகிடு விலை உயர்வு!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
தக்காளி விலை உயர்வு

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. இல்லத்தரசிகள் இந்த திடீர் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும்   1200 டன் தக்காளி வந்து சேர்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் இந்த திடீர் விலையேற்றம். மழை காரணமாக சேமித்து வைக்க சரியான இடம் இல்லாததால் 700 டன் மட்டுமே வர வழைக்கப்பட்டுள்ளது.   கடந்த சில தினங்களாக கோயம்பேட்டில் ரூ.40 விற்பனை செய்யப்பட்ட தக்காளி. இன்று கிலோ ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.சென்னையின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை தக்காளி விலை கிலோ ரூ.110 க்கும் அதிகமாக  விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ தக்காளி ரூ. 85-க்கு விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு..!

தக்காளி மட்டுமல்ல அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.  பீன்ஸ் ரூ.120, இஞ்சி ரூ.200 க்கும் விற்பனை செய்யப்பாட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திரா தமிழகம் உட்பட  பல பகுதிகளில் இருந்தும் கோயம்பேடுக்கு கொண்டு வரப்படும் நிலையில் சேமித்து வைக்க முடியாததால் வியாபாரிகள் குறைவாக கொள்முதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web