இல்லத்தரசிகள் அதிர்ச்சி... கிலோ ரூ60க்கு தக்காளி விற்பனை!

 
தக்காளி விலை உயர்வு
 


வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் தக்காளி வரத்து குறையத் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தக்காளி

தமிழ்நாட்டிற்கு தேவையான தக்காளியில் முக்கால்வாசி பாகம்  ஆந்திரா, மத்திய பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம்  மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சில காலமாக வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தக்காளி, வரத்து குறையத் தொடங்கியுள்ளது.  
இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.50 க்கு விற்பனையாகி வந்த தக்காளி இன்று ரூ10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

ஜூன்   மாதம் ரூ.20 முதல் ரூ.30க்கு விற்பனையாகி வந்த தக்காளி விலை தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்டு முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் தக்காளி விலை ரூ.100 வரை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது