இல்லத்தரசிகள் ஆறுதல்... சற்றே குறைந்த தக்காளி, முருங்கைக்காய்... !

 
மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!
 

சென்னை கோயம்பேடு சந்தையில் பல நாள் கடுமையாகப் பறந்த காய்கறி விலை, இன்று காலை வரத்து அதிகரித்ததால் சற்றே தளர்வு கண்டுள்ளது. தக்காளி கிலோ ரூ.60க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.380க்கும் மொத்தமாக விற்கப்படுகின்றன. இதன் தாக்கமாக, ஓரிரு நாள்களில் சில்லறை விற்பனையிலும் விலை குறைந்து மக்களுக்கு நிம்மதி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முருங்கைக்காய்

அண்மையில் மழை அதிகரிப்பால் வரத்து குறைந்து தக்காளி ரூ.90–110, முருங்கைக்காய் ரூ.400–420 வரை உயர்ந்தது. முன்பு ரூ.20–35க்குக் கிடைத்த தக்காளி திடீரென ஏறியது. நேற்று கிலோ ரூ.80 இருந்த தக்காளி இன்று ரூ.60க்கு குறைந்திருப்பதும் நிம்மதியை தந்துள்ளது.  

தக்காளி விலை உயர்வு

இருப்பினும் முருங்கைக்காய் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது. முந்தைய ரூ.30–35 விலையில் இருந்த காய்கறி, சில நாட்களாக ரூ.300–350 ரேஞ்சில் தடம் பிடித்து வருகிறது. சில்லறையில் தக்காளி ரூ.100–110க்கும், முருங்கைக்காய் ரூ.380–400க்கும் விற்று வருவதால், மழைக்காலம் முழுமை பெறும் வரை இந்த உயர்வு நீடிக்கும் என வியாபாரிகள் கணித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!