தக்காளி–வெங்காயம் விலை கடும் சரிவு… கூடை கூடையாக அள்ளிச் செல்லும் மக்கள்!
சமையலுக்கு சுவை சேர்க்கும் தக்காளி மற்றும் வெங்காயம் பொதுமக்களின் அத்தியாவசிய பொருளாக உள்ளது. காய்கறிகளை விட பலர் இந்த இரண்டையும் அதிகமாக வாங்கி பயன்படுத்துகின்றனர். அனைத்து வகை உணவுகளிலும் இவை முக்கிய இடம் பிடிப்பதால், விலை குறைந்தாலே மக்கள் மகிழ்ச்சியுடன் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். சமீப நாட்களாக விலை குறைந்ததால் சந்தைகளில் வாங்குபவர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி சந்தைகளில் தக்காளி அதிக அளவில் வரத்தால் பெட்டி பெட்டியாக குவிந்துள்ளது. அதேபோல் வெங்காயமும் லாரி லாரியாக மூட்டைகளில் வந்து சேர்ந்து வருகிறது. வரத்து அதிகரித்ததால் இரண்டின் விலையும் போட்டி போட்டு குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது 4 முதல் 5 கிலோ வெங்காயம் ரூ.100க்கும், தக்காளி 5 கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் பல காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. விலை சரிவால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். சந்தைகளிலும் விற்பனை உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
