கூடுதலாக 300 ரேஷன் கடைகளில் தக்காளி!!

 
ரேஷன் தக்காளி

இந்தியா முழுவதும் தொடர் மழை மற்றும் விளைச்சல் வரத்து குறைப்பு காரணமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தரமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ40க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை கடந்த வாரத்தில்  திடீரென சதமடித்தது. அடுத்தடுத்த நாட்களில் தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்தது.

தக்காளி

இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் துயர் போக்கும் வகையிலும் தக்காளி  ரேஷன் மற்றும் பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கூடுதல்ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி விலை உயர்வு
இதனையடுத்து பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கும் தக்காளி விலை உயர்வை சமாளிக்கும் பொருட்டு, நாளை முதல் தமிழகத்தில் உள்ள 300 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே சென்னையில் பல ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web