நாளை அழகர் வைகையாற்றில் எழுந்தருளுகிறார்... மதுரை முழுவதும் போக்குவரத்து மாற்றம்!
May 11, 2025, 10:05 IST
மதுரை மாவட்டத்தில் நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ராமராயர் மண்டபம் செல்லும் வழி, ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் புதுப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓபுளாபடித்துறை வைகை தென்கரை பகுதி, வைகை வடகரை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.

சித்திரை திருவிழாவை ஒட்டி மதுரை மூன்றுமாவடியில் நடந்த கள்ளழகர் எதிர்சேவையில் ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் நாளை நடைபெறுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
