நாளை தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்... தன்னார்வலர்கள் பங்கேற்க அழைப்பு!

 
விழுப்புரத்தில் புதிய பறவைகள் காப்பகம் தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை மார்ச் 8ம் தேதி துவங்கும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு, நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு என 2 கட்டமாக கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன.

அதன்படி நாளை மார்ச் 8ம் தேதி மற்றும் மார்ச் 9ம் தேதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியும், அதன்பிறகு வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பும் நடக்கிறது. 

அதிர்ச்சி! பறவைகள் இறந்தால் எச்சரிக்கையாக இருங்க!

தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 20 இடங்களும் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 25 இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பறவைகள் கணக்கெடுப்பானது காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடத்தப்பட உள்ளது.

குட் நியூஸ்!தினந்தோறும் சாரல் மழை! குவியும் வெளிநாட்டு பறவைகள்!

இந்த கணக்கெடுப்ப பணிகளில் ஈடுபட விருப்பமும், ஆர்வமும் உள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்கள் இது தொடர்பாக வனச்சரக அலுவலர் உ.கவின் அவர்களை 9597477906 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் கலந்து கொள்ளும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web