நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நோ லீவ்!!

 
மாணவிகள் அரசு பள்ளி

நாளை ஜூலை 15 ம் தேதி சனிக்கிழமை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.  அந்த வகையில் நாளை அவரது 121வது பிறந்த நாள் விழா  அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவு இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

மாணவிகள்


 இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் வகையில் விதமாக நாளை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுமே வேலை நாளாக செயல்படும் என   பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து   பள்ளிக்கல்வி இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என அரசு அறிவித்து, அந்நாளில் பள்ளிகளில் காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து  கொண்டாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள்


 இதன் படி நாளை தமிழகம் முழுவதும்  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு  பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாளில் காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும், பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web