நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

 
மாணவிகள் விடுமுறை மகிழ்ச்சி

நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறை அறிவிப்பது  குறித்து, நீதிமன்றம் எதனடிப்படையில் என்று கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடைப்பெறுவதையடுத்து, இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் , அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் விடுமுறைகளும் அறிவிக்கப்படுவதுண்டு. உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில்  விடுமுறை அளிக்கப்படுகிறது. 

விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில்  ஒவ்வொரு ஆண்டும்  மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வரும் கடந்த பிப்ரவரி 18 ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இன்று பிப்ரவரி 23ம் தேதி வியாழக்கிழமை காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு யானை வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறும் . நாளை பிப்ரவரி  24ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் தேரோட்டமும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25ம் தேதி நாளை மறுநாள் சனிக்கிழமை  காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும், பிப்ரவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கிலும் வீதி உலா நடைபெறும்.

உள்ளூர் விடுமுறை

பிப்ரவரி 27ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறும். மார்ச் 2ம் தேதி வியாழக்கிழமை)காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் சாமி வீதி உலா, இரவு கும்பப் படையல், காப்புகளைதல், கொடியிறக்கத்துடன்  விழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கோலாகலமாக கொண்டாடும் வகையில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் மார்ச் 4ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web