நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை! உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 
#BREAKING: இன்று 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

நாளை தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி என நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அய்யா வைகுண்டர் சாமி அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும்  இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் சாமி அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை வழங்குமாறு முதல்வருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்  ஐயா வைகுண்டர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள், இவரை இப்போதும் மும்மூர்த்தியின் அவதாரமாக கருதி வணங்கி வருகின்றனர். 

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த  சாதி பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர் வைகுண்டர்.  தம் சொந்த பணத்தில் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றை நிறுவி, பொதுமக்கள் அனைவரும் சாதிய பாகுபாடின்றி அந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதித்தார்.

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இவர் பிறந்த தினமான மாசி 20ம் தேதியை வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் நாளை மார்ச் 4ம் தேதி அவருடைய அவதார தினம்  கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலிலும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

இதனால் அய்யா வழி பக்தர்கள் மட்டும் சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். மார்ச் 4ம் தேதி  உள்ளூர் விடுமுறை தினத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும்  பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web