நாளை மகா சிவராத்திரி... விரதமுறை, வழிபாட்டு பலன்கள்!

 
பிரதோஷம்

நாளை மகா சிவராத்திரி தினம். ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல் விஞ்ஞான ரீதியாகவும் மகா சிவராத்திரி மிக முக்கியமான தினமாக கருதப்படுகிறது. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், வருடத்திற்கொரு முறை மகா சிவராத்திரியன்று மட்டுமாவது சிவனை வழிபட மிஸ் பண்ணாதீங்க. ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல், விஞ்ஞான ரீதியாகவும், மஹா சிவராத்திரி தினத்தில் நம்முடைய முதுகு தண்டுவடம் வளையாமல் நேராக நிமிர்ந்து இருப்பது ஆன்மிக, ஆரோக்கிய பலத்தைத் தரும். அதனால் தான் இந்துக்கள் அன்றைய தினம் தூக்கத்தைத் துறந்து சிவ வழிபாடு நல்லது என்று ஆறு கால பூஜைகளையும் ஒவ்வொரு சாமத்திலும் வகுத்து வைத்தார்கள். 

ஒவ்வொரு வருஷமும், பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மகா சிவராத்திரி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. 

வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

இந்த வருடம் பிரதோஷமும், மகா சிவராத்திரியும் ஒரே நாளில் வருவது அத்தனை விசேஷமானது. அதுவும் இம்முறை சனிக்கிழமையில் பிரதோஷம் வருவதால், சனி பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.  அம்மனுக்கு நவராத்திரி, சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். சிவராத்திரி விரதம் நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்பது ஐந்து வகைப்படும்.

இதில் மகா சிவராத்திரி சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி அன்று வருகிறது. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.

மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.

நடப்பாண்டில் மகாசிவராத்திரி நாளை பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது. நாளை காலையிலிருந்து சிவராத்திரி விரதம் தொடங்கலாம். அதே மாதிரி சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இன்று இரவு எளிமையான உணவு சாப்பிட்டுவிட்டு நாளை பட்டினி விரதம் இருக்கலாம். 

சிவன் கடவுள் பிரதோஷம் சிவராத்திரி

நாளை மகா சிவராத்திரி ஆரம்பித்துவிடும். எனவே நாளை மௌன விரதமும் ஸ்பெஷலான ஒன்றாக கருதப்படுகிறது. அதற்கு 15ம் தேதி காலை எழுந்ததிலிருந்து மவுனமாக இருக்க வேண்டும்.   காலையில் குளித்துவிட்டு அபிஷேகம் வழிபாடு செய்து திருவாசகம், சிவபுராணங்களை ஆரம்பிக்கலாம். கோயில் செல்ல முடியாதவர்கள் கூட வீட்டில் இருந்து விரதம் கடைபிடிக்கலாம் பால், தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். மாலையில் வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் உருவப்படத்திற்கு சிலைக்கு வழிபாடு செய்யலாம். 

பூஜை ஆரம்பிக்கும் முன் ஒரு முறை குளிக்க வேண்டும். வீட்டில் இருக்கிற எளிமையாக சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம்.  கருங்கல், உலோகத்தால் ஆன சிலைகளுக்கு அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி அன்றூ மொத்தம் 4 காலம் உள்ளது. முதல் காலம் இரவு 7:30 மணிக்கும் இரண்டாம் காலம் இரவு 10.30க்கும் மூன்றாம் காலம் நள்ளிரவு 12 மணிக்கும் நான்காம் காலம் அதிகாலை 4:30 மணிக்கு ஆரம்பிக்கிறது. இந்த நான்கு காலங்களும் வெவ்வேறு கோயில்களில் ஒவ்வொரு மாதிரி அமைந்து இருக்கும். அவரவருக்கு  அருகில் உள்ள கோயிலில் கடைபிடிக்கப்படும் காலத்தை பின்பற்றி  நேரத்தை வகுத்துக் கொள்ளலாம்.  சிவபெருமானுக்கு பிடித்த வில்வம் இலை, மலர்கள் வைத்து அபிஷேகம் செய்யலாம்.  கோயிலில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே சிவன் விக்ரகம் வைத்து வழிபாடு செய்து அபிஷேகம் செய்யலாம். 

முதல் காலத்தில் பாலபிஷேகம் செய்து பாசிப்பருப்பு பொங்கல் செய்யலாம். இரண்டாம் காலத்தில் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து இனிப்பு பாயாசம், கற்கண்டு பொங்கல் செய்யலாம். 

மூன்றாம் காலம் சிவபெருமானுக்கு முக்கியமான காலமாகும். அப்போது தேனால் அபிஷேகம் செய்து எள் சாதம் செய்து படைக்கலாம். நான்காவது காலம் கரும்பு சாற்றினால் அபிஷேகம் செய்து சுத்த சாதத்தில் நெய் ஊற்றி படைக்கலாம்.  

தூங்காமல் இருப்பவர்களுக்கு இந்த வழிபாடு துணையாக இருக்கும். நிறைய அபிஷேகம் செய்ய முடியாது அதற்கு ஏதோ ஒரு நெய்வேதியம் ஒரு அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி அன்று திருவாசகம் படிக்கலாம். 

பிப்ரவரி 16ம் தேதி  காலையில் 6:00 மணிக்குள் தீபாரதனை செய்து சிவராத்திரி வழிபாட்டை முடித்து விட வேண்டும். குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் விரதமாக இருக்கலாம். மலர்கள் தீபங்கள் அர்ச்சனைக்கு கொடுத்து விடலாம்.  வீட்டில் செய்ய முடியாதவர்கள் கூட கோவிலில் வாங்கி கொடுக்கலாம்.

பிப்ரவரி 15ம் தேதி இந்த வழிபாட்டை முடித்து விட்டு, 16ம் தேதி காலையில் நெய்வேத்தியம் சாப்பிடலாம். அதே மாதிரி பட்டினி விரதம் இருப்பவர்கள் கோயில்களில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிடலாம். சிவராத்திரி விரதத்தை 16ம் தேதி காலையில் பூர்த்தி செய்யலாம் நன்றாக சாப்பிட்டுவிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். பிப்ரவரி 15ம் தேதி  சிவராத்திரி அன்று தூங்காமல் இருந்து 16ம் தேதி காலையிலும் தூங்கக்கூடாது அடுத்த நாள் மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டு குடும்பம் செழிக்க நம் அனைத்து பிரார்த்தனைகளையும் முடித்து விட்டு இரவு 7 மணிக்கு படுத்து தூங்குவது சிறப்பு. 
முழுநேரம் கண்முழிக்க முடியாதவர்கள் இரவு 11.45 இல் இருந்து ஒரு மணி வரை கண் முழிக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அலுவலகத்திற்கு செல்பவர்கள் எல்லாம் 12 மணிக்கு பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் விழித்திருந்து தியானம் செய்யலாம்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!