நாளை ரத சப்தமி... திருப்பதியில் 7 விதமான தேரில் மலையப்ப சுவாமி... 3 நாட்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் ரத்து!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிக முக்கியமான உற்சவங்களில் ஒன்றான 'ரத சப்தமி' நாளை நடைபெறுகிறது. இதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது.
இன்று (ஜனவரி 24) முதல் வரும் ஜனவரி 26-ஆம் தேதி வரை (திங்கட்கிழமை) சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது. இந்த நாட்களில் பக்தர்கள் நேரடியாக வரிசையில் சென்று தரிசனம் செய்யலாம்.

ரத சப்தமி தினமான நாளை (ஜனவரி 25), வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான எந்தவொரு பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேரடி வி.ஐ.பிக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற ஆர்ஜித சேவைகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக தரிசன வரிசைகளும் நாளை செயல்படாது.

நாளை ஒரே நாளில் மலையப்ப சுவாமி 7 விதமான வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சூரிய பிரபை வாகனம் (காலை) சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், சந்திர பிரபை வாகனம் (இரவு)
பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்துத் தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கூறுகையில், "ரத சப்தமி விழாவிற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாட வீதிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 14 வகையான அன்னப்பிரசாதங்கள், 85 உணவு கவுண்ட்டர்கள் மூலம் காலை முதல் இரவு வரை தடையின்றி வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
