நாளையே கடைசி !! மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மறந்திடாதீங்க!!

 
மின் இணைப்பு எண் ஆதார்

தமிழகத்தில் மொத்தம்  2 கோடிக்கும் அதிகமான  வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன.அத்துடன் 22லட்சத்திற்கும் அதிகமான  விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.  தமிழகத்தை பொறுத்தவரை விவசாயத்திற்கும், நெசவு தொழிலுக்கும் இலவச மின்சாரம் மற்றும் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மின் இணைப்பு

தமிழகத்தில் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியிருந்தது. 2022  அக்டோபரில் தமிழக மின்சார வாரியம் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நவம்பர் 15, 2022 முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது.  ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன.   மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பலர் இணைத்திருக்காத நிலையில்  இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28 வரை  நீட்டிக்கப்பட்டது.

மின் அட்டை ஆதார்

அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நாளை  பிப்ரவரி 28 நாளை செவ்வாய்க்கிழமையுடன்  நிறைவடைகிறது. இதற்குமேல் அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என ஏற்கனவே மின்சார வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதன் படி மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான  https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhmtl  மூலம் தங்களது மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும். அதே  இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்தால்  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும்  சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web