நாளை கடைசி தேதி... முந்துங்க... ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு அதன் பிறகு கிடைக்காது!

 
பொங்கல் பரிசுத்தொகுப்பு

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், பரிசுத்தொகுப்பைப் பெறுவதற்கு நாளை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வரையில் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. தமிழகம் முழுவதும் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.

பொங்கல் ரேஷன்

ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் ஜனவரி 4 முதல் 7 வரை டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதன் அடிப்படையில், நேற்று வரை 24,924 ரேஷன் கடைகள் மூலம் 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 899 குடும்பங்களுக்கு ரூ.6,123.26 கோடி ரொக்கம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. காலை, மாலை நேரங்களில் மக்கள் ஆர்வமுடன் ரேஷன் கடைகளுக்கு சென்று பரிசுகளை பெற்றனர்.

பொங்கல்

பொங்கல் பரிசு விநியோகம் இன்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுபட்டவர்கள் நாளை சென்று பரிசை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!