நாளை கடைசி தேதி... ஜேஇஇ விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்கலாம்!

 
JEE NEET Entrance Exam

2026-27-ஆம் கல்வியாண்டிற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வின் முதல் அமர்வு கடந்த ஜனவரி இறுதியில் நடைபெற்ற நிலையில், மாணவர்கள் தங்களின் உத்தேச மதிப்பெண்களைச் சரிபார்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு நடைபெற்ற நாட்கள்: 2026 ஜனவரி 21 முதல் ஜனவரி 29 வரை. நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். தேசியத் தேர்வுகள் முகமை (NTA) ஆண்டுக்கு இரண்டு முறை இந்த முதன்மைத் தேர்வை நடத்துகிறது.

ஜேஇஇ

மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட விடைத்தாள்கள் மற்றும் அதிகாரப்பூர்வத் தற்காலிக விடைக்குறிப்புகளை jeemain.nta.nic.in இணையதளத்திலும், nta.ac.in இணையதளத்திலும் பார்க்கலாம் வெளியிடப்பட்டுள்ள விடைகளில் ஏதேனும் தவறுகள் இருப்பதாக மாணவர்கள் கருதினால், அதனைச் சவாலுக்கு உட்படுத்த (Challenge) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது:

நாளை பிப்ரவரி 6 மாலைக்குள் தங்களின் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். தகுந்த ஆதாரங்களுடன் ஆன்லைன் வழியாக மட்டுமே ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும். ஒவ்வொரு கேள்விக்கான ஆட்சேபனைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

மாணவர்களுக்கு ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது சந்தேகம் இருப்பின் பின்வரும் வழிகளில் என்டிஏ-வை அணுகலாம்: தொலைபேசி எண்கள்: 011-40759000 அல்லது 011-69227700. மின்னஞ்சல் முகவரி: jeemain@nta.ac.in.

தற்காலிக விடைக்குறிப்புகள் மீது பெறப்படும் ஆட்சேபனைகளை நிபுணர் குழு ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்பு (Final Answer Key) மற்றும் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!