நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு... 5 பில்லியன் டாலர் புரிந்துணர்வு... !

 
சிங்கப்பூர்

தமிழக அரசு  2030 க்குள் தமிழகத்தின்  பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக்க வேண்டும் என  இலக்கு நிர்ணயித்துள்ளது.  இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல நாடுகளுக்கும் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக  அரசின் சார்பில்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.  

சிங்கப்பூர்


இந்த  முதலீட்டாளர்கள் கூட்டத்தின் மூலம்  சுமார் ரூ 5.5 லட்சம் கோடி  மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுமார்  5  மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள்   முதலீட்டைச் செய்ய சிங்கப்பூர் அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்து தமது ட்விட்டரில்  சிங்கப்பூர்  உயர் கமிஷனர் “ தமிழக அரசின்  உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கிளம்பிவிட்டோம்.

சிங்கப்பூர்

இந்த முதலீட்டுக் கூட்டத்தின் முதல் கூட்டணி நாடாகச் சிங்கப்பூர் இருக்கும் .  இக்கூட்டத்தில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் 5 பில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடக்கும்' என பதிவிட்டுள்ளார்.  இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் நாளை ஜனவரி  7ம் தேதி சென்னை டிரேட் சென்டரில் பிற்பகல்   3.15 மணிக்கு நடக்க உள்ள சிங்கப்பூர் கூட்டத்தில் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.   இந்தப் புதிய முதலீடுகள் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத் தொடர்பு மேலும்   வலிமை பெறும் என கூறப்படுகிறது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web