நாளை வள்ளலார் தினம்... டாஸ்மாக், இறைச்சி கடைகளை மூட உத்தரவு!
நாளை வள்ளலார் தினம். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிவன் கோயில்களிலும், முருகன் கோவில்களிலும் பக்தர்கள் வழிபட குவிவார்கள். நாளைய தினம், தனிப்பெரும் கருணை என போதித்த வள்ளலார் ராமலிங்க அடிகளார் தினமாக கொண்டாடப்படுகிறது. நாளை இறைச்சி கடைகளைத் மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று நாளை தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும், பார்களையும் மூட உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

நாளை பிப்ரவரி 1ம் தேதியன்று ‘வள்ளலார் தினம்’ அனுசரிக்கப்படுவதால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது.

நாளை ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். மாவட்டங்களில், செயல்பட்டு வரும் இறைச்சி சந்தைகள் போன்றவைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
