நாளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகை... கலைவாணர் அரங்கில் பிரம்மாண்ட பாராட்டு விழா!

 
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன அவரது சென்னை வருகை நாளை உறுதியாகியுள்ளது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி கலந்துகொள்கிறார். அங்கு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். நாளை மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமையில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெறுகிறது.

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

ஏ.சி. சண்முகம் (எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர்) முன்னிலை வகிக்கும் இந்த பாராட்டு விழாவில், துணை ஜனாதிபதியைக் கௌரவிக்கும் வகையில் பல துறைகளைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் உரையாற்ற உள்ளனர்:

மத்திய அமைச்சர் எல். முருகன், இசைஞானி இளையராஜா, பாரிவேந்தர் (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர்), ஐசரி கணேஷ் (வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர்). இயக்குநர் பாக்யராஜ், டாக்டர் சுதா சேஷையன், டாக்டர் சொக்கலிங்கம்,  நீதித்துறை: ஓய்வுபெற்ற நீதிபதிகள் டி.என். வள்ளிநாயகம், ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். விழாவின் இறுதியில், தனக்கு அளிக்கப்படும் பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்துத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், கலைவாணர் அரங்கம் மற்றும் அவர் செல்லும் வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக பாஜக மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!