பகீர்.. 11 வருஷங்களா வீட்டில் ஜெயில் கட்டி மனைவியை அடைத்து வைத்து சித்ரவதை! ஆந்திராவை அதிர வைத்த சம்பவம்!

 
சாய் சுப்ரியா

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் - சாய் சுப்ரியா கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே, மதுசூதனன் - சாய் சுப்ரியா தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மதுசூதனன் அவரது தாய் உமா மகேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் பேச்சை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த விவகாரம் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக கடந்த 11 ஆண்டுகளாக மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒரு இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தார். அந்த பெண்ணுக்கு குடும்பத்தில் யாருடனும் பேச அனுமதி இல்லை. சாய் சுப்ரியாவின் பெற்றோரும் பலமுறை முயன்றும் மகளுடன் பேச அனுமதிக்கவில்லை. மகளை சந்திக்க அவர்கள் நேரடியாக பலமுறை வீட்டுக்கு வந்தனர். ஆனால் அவர்களை வீட்டுக்குள்ளே அனுமதிக்காமல் மதுசூதனன் குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்.

சாய் சுப்ரியா

இது குறித்து 11 ஆண்டுகளுக்கு பிறகு சாய் சுப்ரியாவின் பெற்றோர் கடந்த 28ஆம் தேதி இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். தங்கள் மகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சாய் சுப்ரியாவின் பெற்றோருடன் கடந்த 28ஆம் தேதி மதுசூதனன் வீட்டுக்கு வந்தனர்.

ஆனால் மதுசூதனன் வழக்கறிஞர் என்பதால், தன்னுடைய வீட்டுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி உள்ளதா, என் வீட்டுக்கு நீங்கள் எப்படி வரலாம் என்று அவர்களுடன் நியாயவாதியாக பேசி விரட்டி அடித்தார். ஆனால் போலீசார் மற்றும் சாய் சுப்ரியாவின் பெற்றோர் ஆகியோர் நீதிமன்றத்தில் சர்ச் வாரண்ட் பெற்று நேற்று மதுசூதனன் வீட்டுக்கு வந்தனர். அப்போதும் மதுசூதனன் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் போலீசாரை வீட்டுக்குள் விட மறுத்தனர்.

சாய் சுப்ரியா
ஒரு வழியாக நீதிமன்ற அனுமதியை காட்டி வீட்டுக்குள் புகுந்த போலீசார், தனி அறையில் அடைபட்டு கிடந்த சாய் சுப்ரியாவை மீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். மிகவும் மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சாய் சுப்ரியாவை பார்த்த நீதிபதி அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க உத்தரவு பிறப்பித்தார். 11 ஆண்டுகள் மனைவியை தனியாக அடைத்து வைத்திருந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web