உதட்டை தொடுறதும், அழுத்துவதும் பாலியல் குற்றமில்லை... உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

 
உதடு காதல்

உதட்டைத் தொடுவதும், உதட்டை அழுத்துவதும் பாலியல் குற்றமில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில், 12 வயதுடைய சிறுமி ஒருவர், தனது இளம் வயதிலேயே தாயாரால் கைவிடப்பட்ட நிலையில், குழந்தை பராமரிப்பு நிறுவனத்தில் தங்கியிருந்தப்படி படித்து வந்தார். விடுமுறை நாட்களில் டெல்லியில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்த சிறுமி, அதைப் போலவே தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இருந்து தனது மாமாவின் வீட்டிற்குச்  சென்றிருந்தார். அப்போது சிறுமியின் மாமா, சிறுமியின் அருகே படுத்துக் கொண்டு சிறுமியின் உதட்டை அழுத்தியுள்ளார்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் மாமா மீது போக்சோ சட்டத்தின் பிரிவு 10ன் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில், சிறுமியின் உதட்டை தொடுவது போக்சோ குற்றமில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை தெரிவித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம்

இப்படி உதட்டை அழுத்துவது சிறுமிக்கு கண்ணியக் குறைவு தான். இருப்பினும் பாலியல் எண்ணமில்லாமல் இதை செய்வது போக்சோ வரம்பிற்குள் வராது என நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். 

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 10ன் கீழ் குற்றச்சாட்டை நிலைநிறுத்துவதற்குத் தேவையான சட்ட வரம்பை பூர்த்தி செய்யத் தவறிவிடும் எனக் கூறியுள்ளார்.  

உயர்நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவோ அல்லது அத்தகைய குற்றத்தைச் செய்ய முயற்சித்ததாகவோ கூட குறிப்பிடவில்லை. பாதிக்கப்பட்டவரின் அறிக்கைகளில் பாலியல் உந்துதல் கொண்ட முன்னேற்றத்தின் சிறிதளவு அறிகுறி கூட இல்லாதது, ‘பாலியல் நோக்கம்’ என்ற அடிப்படைத் தேவையை மறுக்கிறது” என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web