பணத்தை கீழே வைங்க... தொட்டா தீட்டு ... விசித்திர மூட நம்பிக்கையுடன் கிராமம்!
இமாச்சலப் பிரதேசத்தின் குலு பள்ளத்தாக்கில் உள்ள மலாணா கிராமம், அதன் கடுமையான கலாச்சார கட்டுப்பாடுகளால் மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. துஷிகா அகர்வால் என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், கடையில் பொருள் வாங்கும்போது பணத்தை நேரடியாக கொடுக்காமல் தரையில் வைப்பது காணப்படுகிறது.
வெளியாட்கள் தொட்டால் ‘தீட்டு’ ஏற்படும் என்ற நம்பிக்கை இங்கு நிலவுகிறது. அதனால் வெளியாட்கள் கிராம மக்களை, வீடுகளை, சுவர்களை, கோவில்களை தொட அனுமதி இல்லை. பணம் மற்றும் பொருட்கள் கைமாறும்போதும் நேரடியாக வழங்கப்படாது. அனைத்தும் தரையிலேயே வைக்கப்படும்.
மலாணா கிராமத்திற்கு தனி நிர்வாகமும், பழங்கால சட்டங்களும் உள்ளன. இந்திய அரசியலமைப்பை விட, ஜம்லு தேவதாவின் கட்டளைகளே இங்கு முக்கியம். அலெக்சாண்டரின் படைவீரர்களின் வாரிசுகள் தாங்கள் என நம்பும் இந்த மக்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இது பிற்போக்குத்தனமா, கலாச்சார பாதுகாப்பா என்ற விவாதம் இணையத்தில் தீவிரமாக நடக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
