நெகிழ்ச்சி வீடியோ.. அம்மான்னா சும்மா இல்லடா... புலியுடன் போராடி ரத்தம் பீறிட்ட நிலையிலும் குட்டிகளுக்கு பாலூட்டும் தாய் நாய்!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாயின் நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் உள்ள கோரேகாவ் பகுதியில் ஒரு வீட்டில் சக்தி என்ற நாய் தன்னுடைய 10 குட்டிகளுடன் வசித்து வந்தது. ஒரு நாள் இரவு நேரத்தில் அந்த பகுதிக்கு வந்த ஒரு புலி அங்கு படுத்திருந்த தாய் நாயை வாயில் கவ்வி சென்றது.
அதன்பின் சிறுத்தையுடன் போராடிய தாய் நாய் உயிருடன் வந்து அங்கு பசியில் இருந்த தனது குட்டிகளுக்கு பாலூட்டி உள்ளது.
இந்த தாக்குதலில் நாய்க்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் உணவு குழாயில் சிறிய துளை ஏற்பட்டதால் அது சாப்பிடும் உணவு வெளியே வரும் அளவிற்கு தீவிர காயம் ஏற்பட்டது. சக்தி நாய்க்கு பல இடங்களில் மருத்துவ உதவி நிராகரிக்கப்பட்ட நிலையில், WFAஅமைப்பின் மூலம் டாப் டாக்ஸ் கிளினிக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது இந்த நாய் குணமடைந்து வரும் நிலையில் சிறுத்தையால் நாய் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சிறுத்தையால் தாக்கப்பட்ட பிறகும் தனது குட்டிகளை வெறுக்காமல் அவற்றிற்கு பாலூட்ட வந்த சக்தி தான் உண்மையான தாய் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் சக்தியின் குட்டிகளை அப்பகுதி மக்கள் அன்போடு பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!