நெகிழ்ச்சி வீடியோ.. கைக்குழந்தையை நெஞ்சோடு அணைத்தப்படி பணிபுரியும் பெண் காவலர்! குவியும் வாழ்த்துகள்!

 
ரீனா

டெல்லி ரயில் நிலையத்தில், பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு கிளம்பிய ரயிலில் ஏற கூட்டம் முண்டியடித்ததில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவிற்கு செல்லும் பாதையில் பயணிகளின் வசதிக்காக தற்போது கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில் இப்போதும் கூட்டம் அதிகரித்து வருகிறது.


 


இந்நிலையில், மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு டெல்லி ரயில் நிலையத்தில் ​​ரீனா என்ற ரயில்வே போலீஸ் (ஆர்.பி.எஃப்) பெண் காவலர், தனது 1 வயது குழந்தையைத்  சுமந்துக் கொண்டே பணியை பார்க்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

18 பேர் இறந்த ரயில் நிலையத்தின் 16வது நடைமேடையில் பயணிகளை ஒழுங்கமைத்து பாதுகாப்புப் பணியில் ரீனா ஈடுபட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, பல பயணிகள் அவருக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து செலுத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web